புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் |
'ரசவாதி' படத்தில் அர்ஜூன் தாசின் பிளாஷ்பேக் காதலியாக நடித்தவர் ரேஷ்மா வெங்கடேஷ். அந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன்தான் ஹீரோயின். ரேஷ்மா ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். என்றாலும் படத்தில் இடம்பெற்ற அவரது பரதநாட்டியம் அனைவரையும் கவர்ந்தது.
இந்த நிலையில் 'சாலா' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார் ரேஷ்மா. பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகிறது. தீரன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக ரேஷ்மா நடிக்கிறார். 'மெட்ராஸ்' சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் மணிபால், "வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடம் (பார்) தான் 'சாலா' படத்தின் மையக்கரு. இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரம் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.
வட சென்னை எனக்கு மிகவும் பிடித்த பகுதி. அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களது வாழ்க்கை குறித்தும் சினிமாவில் பதிவு செய்ய வேன்டும் என்ற ஆசை எனது முதல் படத்திலேயே நிறைவேறி உள்ளது மிக்க மகிழ்ச்சி. வட சென்னை மக்கள் மட்டுமில்லாமல், அனைத்து ரசிகர்களாலும் 'சாலா' பாராட்டப்படும் என நம்புகிறேன்," என்றார்.