வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் |
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்'. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த விஜய் மில்டனுக்கு பேரதிர்ச்சி இருந்துள்ளது. அது என்ன என்பதை அவரே வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛இந்த படத்தின் ஹீரோ யார், எங்கிருந்து வந்துள்ளான், ரவுடியா, அடியாளா, டாக்டரா என பல கேள்விகள் வைத்து தான் படத்தை உருவாக்கி இருந்தேன். ஆனால் படம் பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது. படத்தின் துவக்கத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை வைத்துள்ளனர். சென்சார் பண்ண ஒரு படத்தில் எப்படி இதுபோன்ற காட்சி வருகிறது. யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது என தெரியவில்லை. அந்த ஒரு நிமிட காட்சியை மனதில் ஏற்றாமல் ரசிகர்கள் படத்தை பாருங்கள் என வேண்டுகோளாகவே வைக்கிறேன்'' என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.