தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பேன்டஸி படமாக வெளிவந்த 'அவதார்' படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றிப் படங்களாக, வசூல் படங்களாக அமைந்தன.
2009ம் ஆண்டில் வெளிவந்த 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது. 2022ம் ஆண்டில் வெளிவந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட குறைவாகவே வசூலித்தது. 2.3 பில்லியன் யுஎஸ் டாலர் தொகையை அது வசூலித்தது. இருந்தாலும் இரண்டு பாகங்களுமே பெரும் லாபத்தைக் கொடுத்த படங்கள்தான்.
இந்நிலையில் 'அவதார்' படத்தின் மூன்றாம் பாகம் 2017ம் ஆண்டிலேயே ஆரம்பமானது. அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதன் படப்பிடிப்பு நடந்தது. 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது விஎப்எக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த வருடம் 2025 டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று(ஆக., 12) 'அவதார் 3'ம் பாகத்திற்கான தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு 'அவதார் - பயர் அன்ட் ஆஷ்' என அறிவித்துள்ளார்கள். தமிழில் 'அவதார் - நெருப்பு மற்றும் சாம்பல்' என்று சொல்லலாம்.
அவதார் படம் 3ம் பாகத்தைத் தொடர்ந்து 4 மற்றும் 5ம் பாகங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. இதற்கான படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன. ஆனாலும், 3ம் பாகம் வெளிவந்த பின்புதான் 'அவதார் 4' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடர்வேன் என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.