துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் மம்முட்டியை பொருத்தவரை ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்துக்கொண்டே இன்னொரு பக்கம், 'நண்பகல் நேரத்து மயக்கம், காதல் ; தி கோர், பிரம்மயுகம்' போன்ற விருது பெறத்தக்க கலைப்படங்களில் நடிப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அதேபோலத்தான் பிரபல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் வருடத்திற்கு ஒரு அறிமுக இயக்குனர் படத்திலாவது நடித்து விடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் மம்முட்டி.
அந்த வகையில் கடந்த 2021ல் ஹாரர் திரில்லராக வெளியான 'பிரிஸ்ட்', 2022ல் ஆணவக்கொலையை மையப்படுத்தி வெளியான 'புழு', 2023ல் அதிரடி போலீஸ் படமாக வெளியான 'கண்ணூர் ஸ்குவாட்' ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை அறிமுக இயக்குனர்களுக்கு வழங்கி அவற்றின் மூலம் வெற்றியையும் பெற்றார். இதனை தொடர்ந்து தற்போது ஜிதின் கே ஜோஸ் என்கிற அறிமுக இயக்குனர் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் மம்முட்டி அந்த படத்தை முடித்ததும் இந்த புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.