டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் 2022ம் ஆண்டில் வெளியான படம் 'பொன்னியின் செல்வன் 1'. அப்படத்திற்கு 70வது தேசிய விருதுகளில் 4 விருதுகள் கிடைத்துள்ளன.
தமிழில் சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை - ஏஆர் ரஹ்மான், சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன், சிறந்த ஒலி வடிவமைப்பு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 விருதுகளை வென்றுள்ளது.
அப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம், “பொன்னியின் செல்வன் 1, பார்வையாளர்களின் அன்பினால் உந்தப்பட்டு தேசிய அங்கீகாரத்துடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. தமிழ் வரலாறு, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சினிமா ஆகியவை கடந்த காலத்திலிருந்து தற்போது வரை ஒன்றாக இணைந்து வெற்றிநடை போடுகிறது. வாழ்த்துகள் மணி சார், ஏஆர் ரஹ்மான், ரவிவர்மன்,” என வாழ்த்தியுள்ளார்.