2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் | 2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' | 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்? | முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : அடுத்தமாதம் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு |

விக்ரம் பிரபு நடித்துள்ள 'சிறை' படம் வருகிற 25ம் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி : சிறை எனது 25வது படம், தாத்தாவும், அப்பாவும் தங்களின் முதல் 25 படத்தில் சாதித்த அளவிற்கு நான் எதையும் சாதிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த படங்கள் வெற்றியோ, தோல்வியோ ஆனால் நல்ல படங்கள் என்பதிலேயே எனக்கு திருப்திதான்.
அதிகமாக போலீஸ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறேன். எனது தோற்றத்தை மனதில் வைத்து அப்படியான கேரக்டரோடு தான் கதை சொல்ல வருகிறார்கள். இனி போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தபோது வந்த கதைதான் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குனர் தமிழ் இந்த கதை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை. ஆனால் டாணாக்காரன் படத்தின் கேரக்டருக்க உயிர் கொடுத்தது போன்று இந்த படத்தின் கேரக்டருக்கு உயிர் கொடுக்க உங்களால்தான் முடியும் என்று சொன்னதால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
டாணாக்காரன் படத்தில் பயிற்சி போலீஸ் என்பதால் எடை குறைத்து நடித்தேன். இதில் அதிகாரி என்பதால் எடையை கூட்டி நடித்திருக்கிறேன். தெலுங்கில் நடித்த 'காட்டி' படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. நானே டப்பிங் பேசி நடித்தேன். அனுஷ்கா நல்ல தோழியாக அமைந்தார். அவரது இரக்க குணத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டேன். தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் வருகிறது. தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். 25 படங்களில் நடித்து விட்டேன். அடுத்து வரும் 25 படங்களில் ஏதாவது சாதித்து காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.