ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று மட்டுமே வெளியீடு பற்றி அறிவித்திருந்தார்கள். ஆனால், கடந்த சில வாரங்களாகவே இப்படம் எப்போது வெளியாகும் என்று கேள்வி இருந்து வந்தது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகுமா அல்லது அக்டோபர் 10ம் தேதி வெளியாகுமா என்று ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தார்கள்.
அக்டோபர் 10ம் தேதி சூர்யா நடித்கும் 'கங்குவா' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அந்தப் படத்தின் டிரைலர் கூட சமீபத்தில் வெளியாகியது. பான் இந்தியா படமாக அந்தப் படத்தை வெளியிடப் போகிறார்கள்.
தற்போது ரஜினி நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றிய அறிவிப்பு வந்துள்ளதால் 'கங்குவா' அதே நாளில் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் வெளியாகிறது என்றால் அப்படத்திற்கே அதிக தியேட்டர்களைக் கொடுக்க முன்வருவார்கள். அப்படி நடந்தால் 'கங்குவா' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை.
மேலும், இரண்டு படங்களுமே பான் இந்தியா வெளியீடாக தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகப் போகிறது. அதனால், அந்தந்த மாநிலங்களில் குறிப்பிடத்தக்க தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்.
கன்னடத்தில் துருவா சர்ஜா நடிக்கும் 'மார்ட்டின்' படத்தை பான் இந்தியா படமாக அக்டோபர் 11 வெளியிட உள்ளார்கள். அதனால், கர்நாடகாவில் அந்தப் படத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஹிந்தியில் ஆலியா பட் நடிக்கும் 'ஜிக்ரா', ராஜ்குமார் ராவ் நடிக்கும் 'விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ', ஹிமேஷ் ரேஷமய்யா நடிக்கும் 'படாஸ் ரவிக்குமார்' ஆகிய படங்கள் அக்டோபர் 11ல் வெளியாக உள்ளன.
இத்தனை போட்டிகளுக்கு நடுவில் 'வேட்டையன், கங்குவா' இரண்டிற்கும் ஒரே நாளில் போதுமான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்குமா ?, என்ற கேள்வி திரையுலகத்தில் எழுந்துள்ளது. கடைசியில் 'கங்குவா' படத்தைத் தள்ளி வைக்கும் நிலைதான் வரும் என்று கோலிவுட்டில் விசாரித்த போது தெரிவிக்கிறார்கள்.