போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2023ம் வருடம் ஜனவரி மாதத்திலிருந்து நடந்து வருகிறது. அவ்வப்போது சில இடைவெளிகளால் படப்பிடிப்பு தடைபட்டு இன்னமும் முடிக்கப்படாமல் உள்ளது.
இரண்டாம் பாகத்தின் வெளியீட்டை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவதாக முதலில் அறிவித்திருந்தார்கள். திட்டமிட்டபடி வேலைகள் முடியாது என்பது தெரிய வந்ததால் படத்தை டிசம்பர் 6ல் வெளியிடுகிறோம் என அறிவித்தார்கள். ஆனால், தற்போது அந்தத் தேதியிலும் படம் வெளியாகுமா என்பது சந்தேகமாக உள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு சினிமாவின் மூத்த காமெடி நடிகரான பிரம்மானந்தம், அவருடைய மகன் ராஜா கவுதம் ஆகியோர் நடிக்கும் 'பிரம்ம ஆனந்தம்' படத்தை டிசம்பர் 6ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். விஷ்ணு மஞ்சு, மோகன்லால், மோகன் பாபு, சரத்குமார், மதுபாலா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படமான 'கண்ணப்பா' படம் டிசம்பர் 6ல் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள். லஷ்மண் உடேகர் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா, அக்ஷய்குமார் நடிக்கும் சரித்திர கால ஹிந்திப் படமான 'சாவா' படம் டிசம்பர் 6ல் வெளியாகும் என்று தற்போது அறிவித்துள்ளார்கள்.
'புஷ்பா 2' படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ள நிலையில் தற்போது ஹிந்தியில் 'சாவா' பட வெளியீட்டை அறிவித்துள்ளதால் 'புஷ்பா 2' படம் அன்றைய தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் அதிகமாகி உள்ளது. அப்படம் வர வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்தான் இப்படியான அறிவிப்புகள் வெளியாகிறது என்கிறார்கள்.