தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தீபாவளி பண்டிகை அன்று பெரிய ஹீரோக்கள் நடித்த, பெரிய பட்ஜெட் படங்கள் மோதுகிறது. ரஜினி நடித்த 'வேட்டையன்', சூர்யா நடித்த 'கங்குவா' ஆகிய படங்கள் தீபாவளிக்கு முன்பாகவே அக்., 10ல் வெளியாக உள்ளன. தீபாவளி சமயத்தில் அஜீத் நடித்துள்ள 'விடாமுயற்சி' ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்', ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' ஆகிய படங்களும் வெளியாகின்றன. இந்த போட்டியில் துல்கர் சல்மான் நடித்துள்ள 'லக்கி பாஸ்கர்' படமும் இணைந்துள்ளது.
இந்த படம் தெலுங்கில் தயாரானாலும், தமிழிலும் வெளியாகிறது. ஏற்கெனவே துல்கர் சல்மான நடித்த தெலுங்கு படமான 'சீதா ராமம்' தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ளது. நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நிமிஷா ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் வெளியீடு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “முதலில் இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தீபாவளி வார இறுதியான அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்க கூடுதல் நேரம் தேவைப்படுவதால் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படம் 1980களில் நடந்த ஒரு பிரபல வங்கி கொள்ளையை மையமாக வைத்து பீரியட் படமாக தயாராகி உள்ளது.