சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது விஜயவாடாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர்கள் சத்யராஜ், ஷோபனா ஆகியோர் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திராவும் இந்த படத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார்.
இவர் கடந்த 2008ல் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் என்கிற ஒரே தமிழ் படத்தில் மட்டுமே இதற்கு முன்பு நடித்திருந்தார். கன்னடத்தில் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி அதில் முன்னணி ஹீரோக்கள் பலரும் நடிக்க தயங்கியபோது தானே கதாநாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் உபேந்திரா.
அப்படி அவர் 2010ல் நடித்து இயக்கிய சூப்பர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த சமயத்தில் இந்த படம் குறித்து ரஜினிகாந்த் பாராட்டி பேசியபோது, “இயக்குனர் உபேந்திரா வித்யாசமாக யோசிப்பது போல இந்தியாவில் வேறு ஒருவரும் யோசிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது படத்திற்கு ஒரு புதிய வடிவத்தை கொண்டு வந்து விடுவார். ஒரு இயக்குனராக அவரை தான் ரொம்பவே ரசிக்கிறேன். அவர் படங்களில் நடித்துக் கொண்டு டைரக்ஷனையும் தொடர வேண்டும்” என்று பாராட்டினார்.
அப்போது உபேந்திரா நல்ல கதை வைத்திருந்தால் அதை என்னிடம் சொல்ல விரும்பினால் நிச்சயமாக இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார் ரஜினிகாந்த். அவர் அப்போது உபேந்திராவுடன் இணைந்து பணியாற்ற விரும்பியது 14 வருடம் கழித்து இப்போது ஒரு நடிகராக தனது படத்தில் அவருடன் இணைந்ததன் மூலம் நிறைவேறியுள்ளது