நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
புகழ்பெற்ற காமெடி நடிகை சச்சு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 70 வயதை கடந்தும் இப்போதும் நடித்து வருகிறார். இவர் மயிலாப்பூர் பொண்ணு. நடன கலை குடும்பம். இவரது சகோதரி மாடி லட்சுமி. இவரும் நடன கலைஞர் சினிமாவில் நடனம் ஆடி வந்ததோடு, குணசித்ர வேடங்களில் நடித்தும் வந்தார். மயிலாப்பூரில் தெருவுக்கு நான்கு லட்சுமி இருப்பதால் மாடி வீட்டில் குடியிருந்த இவரை மாடிலட்சுமி என்று அடையாளப்படுத்த அதுவே பெயராகி விட்டது.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'ராணி' என்ற படத்தில் மாடி லட்சுமி நடித்தார். ஒரு நாள் அவர் சச்சுவை படப்பிப்புக்கு அழைத்துச் சென்றார். படத்தில் பானுமதி நாயகி, ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனர். இவர்கள் போன நேரம் அன்று படப்பிடிப்புக்கு வரவேண்டிய ஒரு குழந்தை நட்சத்திரம் உடல்நலக்குறைவு காரணமாக வரவில்லை. உடனே நிலமையை சமாளிக்க இயக்குனர் சாமி வேடிக்கை பார்க்க வந்த சச்சுவை நடிக்க வைக்க முடிவு செய்தார்.
“அவளுக்கு சரியா பேசவே வராதுங்க” என்று மாடி லட்சுமி சொல்லி பார்த்தார். ஆனால் சாமி கேட்காமல் நடிக்க வைத்தார். இப்படித்தான் சச்சு நடிகை ஆனார். அதன்பிறகு 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சச்சு, பின்னர் நாயகியாகவும், காமெடி நடிகையாகவும் வலம் வந்தார்.
சச்சுவின் இயற்பெயர் சரஸ்வதி. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அதை சுருக்கி சச்சு என்று அழைப்பாளர்கள். அன்றைக்கு சினிமாவில் ஏகப்பட்ட சரஸ்வதிகள் இருந்ததால் தன் பெயரை சச்சு என்றே வைத்துக் கொண்டார்.