இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா |
விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 என்ற படத்தை இயக்கியவர் பிரேம்குமார். அவரது இயக்கத்தில் தற்போது கார்த்தி நடித்துள்ள படம் மெய்யழகன். கார்த்தியுடன் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27ல் படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.