படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சிவா இயக்கத்தில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்ட சரித்திரப் படமாக உருவாகியுள்ள 'கங்குவா' படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவதாக முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால், தசெ ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படமும் அதே தேதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், 'கங்குவா' படம் வெளியாகுமா ஆகாதா என்ற சந்தேகம் எழுந்தது. எதிர்பார்த்தபடியே போட்டியிலிருந்து அந்தப் படம் விலகியுள்ளது.
கோவையில் நேற்று நடைபெற்ற 'மெய்யழகன்' பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூர்யா அது பற்றி பேசினார்.
''கங்குவா' நியூஸுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கீங்க. இரண்டரை வருஷத்துக்கு மேல, ஆயிரம் பேருக்கு மேல, தமிழ் சினிமாவுல ஒரு ஸ்பெஷலான படத்தைக் கொடுத்துடணும்னு ராப்பகலா ஒரு ஆயிரம் பேர் வேலை செஞ்சிருக்காங்க. சிவால இருந்து, வெற்றி சார்ல இருந்து, அந்த டீம் எல்லாம் வெயில், மழை, குளிரு, மலை உச்சி, கடலுக்குள்ள, தண்ணிக்குள்ளன்னு வேலை செஞ்சிருக்காங்க. அந்த உழைப்பு என்னைக்கும் வீண் போகாதுன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுக்கான அன்பும், மரியாதையும் நிச்சயமா கொடுப்பீங்கன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு. அது வரப்போகுது, அது வரட்டும்னுதான் நான் சொல்லுவேன்.
அக்டோபர் 10 ரஜினி சாரோட 'வேட்டையன்' வருது. நம்முடைய மூத்தவர், நான் பிறக்கும் போதே நடிக்க வந்தவர். கிட்டத்தட்ட ஐம்பது வருஷமா தமிழ் சினிமாவோட அடையாளமா இருக்கறவர். அந்த மூத்தவருக்கு, சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு அவங்க படம் வரதுதான் சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன். நீங்களும் என் கூட இருப்பீங்கன்னு நான் நம்பறேன். 'கங்குவா' ஒரு குழந்தை, அந்த குழந்தை பிறக்கற அன்னைக்குதான் பிறந்தநாள். அந்த பிறந்தநாளைக் கொண்டாடறதுக்கு, அதை பண்டிகையாக்கறதுக்கு நீங்க என் கூட இருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு,” என்றார்.
இதையடுத்து அக்டோபர் 10ம் தேதி 'வேட்டையன்' தனியாக வருகிறார். 'கங்குவா' படம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.