மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் நெல்சன் முதல் முறையாக பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் படம் 'பிளடி பெக்கர்'. கவின் ஹீரோவாக நடித்துள்ளார். நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் இயக்கி உள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இதில் கவினுடன் இணைந்து அக்ஷயா, ஜெயிலர் தன்ராஜ், அனார்கலி நாசர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு படம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து 'நான் யார்' என்கிற முதல் பாடல் வருகின்ற செப்டம்பர் 13ம் தேதி அன்று மாலை 6 மணியளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதில் கவின் மற்றும் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் அனைவரும் இப்பாடலில் தோன்றுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர் .