மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் விஜய் 2026ம் ஆண்டில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூலம் அரசியலில் இறங்குகிறார். இதனால் விஜய் தனது அடுத்த படமான 69வது படத்தை கடைசி படமாக அறிவித்துள்ளார். இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படத்தை வினோத் இயக்குவதை அவரே உறுதி செய்தார். இன்று இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சிம்ரன், த்ரிஷா, சமந்தா என பல நடிகைகள் பெயர்கள் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய், பூஜா ஹெக்டே இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.