துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழில் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் ஜாதி குறித்து படம் இயக்கி வெற்றி பெறுகிறார் என்கிற கருத்தும் இவர் மீது உள்ளது.
அண்மையில் மூன்றாவது முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷி, மோகன். ஜி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என அறிவித்தனர். பட விழா ஒன்றில் பங்கேற்ற இவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு இந்த படத்தின் தலைப்பு வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணைந்துள்ள இப்படம் எங்களுடைய சக்திக்கு மீறிய படமாக உருவாகிறது.
இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறோம். தற்போது படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெறுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அடுத்தகட்ட அப்டேட்டுகள் வெளியாகும். ஒரு வருட இடைவெளிக்கு காரணம் பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்றேன். ஆனால், அந்த படம் துவங்க காலதாமதம் ஆகிறது. தற்போது என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் இயக்கி வருகிறேன் என தெரிவித்து வந்து விட்டேன்” என்றார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் பேசும்போது, ‛‛தமிழகத்தில் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியல் தலைவராக வருவது நல்லது தான். ஆனால் விஜய் தவறான ரூட்டில் செல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். இது வருத்தமாக உள்ளது'' என தெரிவித்தார்.