திரையுலகில் 25வது ஆண்டு : தேசிய விருது வாங்கியே தீருவேன் என்கிறார் கருணாஸ் | படம் ஓடாவிட்டால் நடுரோட்டில் அமர்ந்து மொட்டை அடிப்பேன்: தெலுங்கு நடிகை சவால் | பிளாஷ்பேக் : ஹாலிவுட்டில் காப்பி அடிக்கப்பட்ட 'பொம்மை' கதை | பிளாஷ்பேக் : கவனிக்கப்படாமல் போன 'சம்பூர்ண மகாபாரதம்' | பிறந்தநாளில் 61 புடவை மழை : நளினிக்கு தம்பி கொடுத்த பரிசு | அதிர்ச்சி அளித்த நடிகை ஷாலினி பாண்டே | 'போர்ப்ஸ்' இதழில் அல்லு அர்ஜுன் | மமிதா பைஜு, ஸ்வாசிகா வெற்றியைக் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன் படக்குழு | 'மொத ராத்திரி' படத்திற்கு சிலம்பரசன் பாராட்டு | நெகட்டிவ் விமர்சனங்களில் யஷ் : ஆதரவு கொடுத்த சுதீப் |

த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. அமிதாப் பச்சன், பஹத் பாசில் , மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, கிஷோர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் முதல்முறையாக நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஹிந்தி பதிப்பில் அமிதாப்பச்சன் அவரது கதாபாத்திரத்திற்கு அவரே குரல் கொடுத்துள்ளார். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி பதிப்புகளில் அமிதாப்பச்சன் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்துள்ளார். இதில் அமிதாப்பச்சன் குரல் போன்ற நம்பகத்தன்மைக்கு சற்று ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனராம்.




