மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து மோதல் ஏற்பட்டு விவாகரத்து செய்வதற்கு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் ஜெயம் ரவி. பாடகி கெனிஷா உடன் ஜெயம் ரவிக்கு தவறான உறவு இருப்பதாக அவரது மனைவி ஆர்த்தி சந்தேகப்படுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்த செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்ததை அடுத்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அதற்கு விளக்கம் கொடுத்தார் ஜெயம் ரவி.
இந்த நிலையில் தற்போது பாடகி கெனிஷாவும் சோசியல் மீடியாவில் அது குறித்த ஒரு விளக்கம் அளித்து இருக்கிறார். அந்த பதிவில், ''ஜெயம் ரவி இடத்தில் நாகரீகம் அற்ற கேள்விகளை கேட்டுள்ளீர்கள். ஆனபோதும் அவர் அதற்கு சரியான பதில் கொடுத்து இருக்கிறார். அதனால் இனிமேலாவது உங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். காரணம் உங்கள் மனதில் இருக்கும் காயத்திற்கு எதிரி வேறு யாரும் இல்லை நீங்களேதான். உண்மை தெரியாமல் தேவையில்லாத கற்பனைகளில் மிதந்து மற்றவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். அவரவர் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ விடுங்கள். தயவு செய்து கருணையுடன் இருங்கள். உண்மை என்னவென்று தெரியாமல் யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம்,'' என்று கூறியிருக்கிறார் பாடகி கெனிஷா.