சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ் | பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா இணையும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஷாருக்கான் - கரீனா கபூர் | மிக விரைவில் வாரணாசி அப்டேட் : ராஜமவுலி சொன்ன தகவல் | ராமாயணா படம் குறித்த எதிர்மறை ரீல் வீடியோவை லைக் செய்த பிரியங்கா சோப்ரா : அதிர்ச்சியில் நெட்டிசன்கள் | ஆரம்பத்தில் எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது என்கிறார் சாய்பல்லவி | வட அமெரிக்காவில் 30 மில்லியன் வசூல் கடந்து 'ராமாயணா' புதிய சாதனை | டிசம்பர் 2026ல் எந்ததெந்த படங்கள் வருகிறது…. | அப்பா, மகன் இருவருக்குமே கிடைத்த மிதமான வெற்றி | நம்ம ஊரு பாட்டுக்காரன்… நடிகர் ராமராஜனின் 40 ஆண்டுகள்! |

2025ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் கலந்து கொள்ள ஹிந்தித் திரைப்படமான 'லாபட்டா லேடீஸ்' படம் தேர்வு செய்து அனுப்பப்படுகிறது.
“கொட்டுக்காளி, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான், ஜமா, வாழை' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள், 'ஆட்டம், உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம், ஆல் வி இமேஜின் அஸ் லைட்' ஆகிய மலையாளப் படங்கள், 'ஹனுமான், கல்கி 2898 எடி, மங்களவாரம்” ஆகிய தமிழ்ப் படங்கள் உள்ளிட்ட மொத்தம் 29 படங்கள் ஆஸ்கர் தேர்வுக்காக விண்ணப்பித்த படங்களாக இருந்தன.
இந்தப் போட்டியில் 12 ஹிந்திப் படங்களும் போட்டியிட்டன. மேலும், 2 மராத்தி படங்கள், ஒரு ஒரியப் படம் ஆகியவையும் போட்டியில் இடம் பெற்றன. இவற்றிலிருந்து ஹிந்திப் படமான 'லாபட்டா லேடீஸ்' படத்தை இந்தியா சார்பாகத் தேர்வு செய்து அனுப்புகிறது பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா.
வழக்கம் போலவே இந்தத் தேர்வுக்கு சில ஆதரவுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ள. தமிழில், 'வெயில், அங்காடித் தெரு, அரவான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன் இது குறித்து, “லாபட்டா லேடீஸ்' இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு பீல் குட் டிராமா திரைப்படம். ஆனால் அதை விட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்,” என பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.




