சந்தானத்தின் 'லவ் பைட்' டிச., 18ல் ரிலீஸ் | பாலகிருஷ்ணா - கொரட்டலா சிவா இணையும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஷாருக்கான் - கரீனா கபூர் | மிக விரைவில் வாரணாசி அப்டேட் : ராஜமவுலி சொன்ன தகவல் | ராமாயணா படம் குறித்த எதிர்மறை ரீல் வீடியோவை லைக் செய்த பிரியங்கா சோப்ரா : அதிர்ச்சியில் நெட்டிசன்கள் | ஆரம்பத்தில் எனக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது என்கிறார் சாய்பல்லவி | வட அமெரிக்காவில் 30 மில்லியன் வசூல் கடந்து 'ராமாயணா' புதிய சாதனை | டிசம்பர் 2026ல் எந்ததெந்த படங்கள் வருகிறது…. | அப்பா, மகன் இருவருக்குமே கிடைத்த மிதமான வெற்றி | நம்ம ஊரு பாட்டுக்காரன்… நடிகர் ராமராஜனின் 40 ஆண்டுகள்! |

மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் வாரணாசி படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கலாம் என பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியிலிருந்து, படத்தின் வெளியீட்டை ஜூலை அல்லது ஆகஸ்ட்க்கு தள்ளிவைக்கப் படக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின. பல்வேறு நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்டு வரும் பிரம்மாண்டமான விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், படத்தின் வெளியீட்டு அட்டவணையில் எந்த மாற்றமும் இருப்பதாகப் படக்குழுவினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இத்தகைய யூகங்களுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை இரவு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆகாசம்லோ ஒரு தாரா என்ற படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ராஜமவுலியிடம், மகேஷ் பாபுவின் ரசிகர்கள் வாரணாசி படத்தின் அப்டேட் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ராஜமவுலி, மிக விரைவில் என்று சுருக்கமாகப் பதிலளித்தார். படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை என்றாலும், படக்குழுவிடமிருந்து விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்பதை அவரது பதில் உணர்த்தியுள்ளது. இதற்கிடையில், புத்தாண்டுப் பரிசாக 2027 ஜனவரி 1ம் தேதி படத்தின் டீசர் அல்லது சிறப்பு வீடியோ கிளிம்ப்ஸை படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால், இது குறித்தும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.




