போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோருக்கு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. தங்களது மகன்களுக்கு உயிர், உலகம் என்று பெயர் வைத்த அவர்கள் தொடர்ந்து அவர்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுடன் தங்களது மகன்களுக்கு இரண்டு வயது நிறைவடைந்திருப்பதை அடுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டு உள்ளார் விக்னேஷ் சிவன். அந்த பதிவில், ‛‛உங்களுக்கு உயிர், உலகம் என்று பெயரிட்டதே நீங்கள் இருவரும் என்னுடைய உயிரும் உலகமுமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உங்கள் மீது நான் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். உங்களது இரண்டாவது பிறந்தநாளில் இன்றைய தினம் அப்பா அம்மா மட்டுமின்றி மொத்த குடும்பமும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளது. கடவுளின் எல்லா அருளும் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பேரோடும், என்னுடைய உயிர் உலகமுமாகிய உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்று அவர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.