சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழில் கடந்த 2000ம் ஆண்டில் காதல் ரோஜாவே என்ற படத்தில் அறிமுகமானவர்தான் பூஜா குமார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த பூஜாகுமார், அதையடுத்து உத்தம வில்லன், மீன்குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் நடித்தார். ஆங்கிலம் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
1999ம் ஆண்டு விஷால் ஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட பூஜா குமாருக்கு 2020ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தேசிய மகள் நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து தனது மகளுடன் தான் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் பூஜா குமார் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், மகளைப் பெற்றிருக்கும் அனைவருக்கும் தேசிய மகளிர் நாள் வாழ்த்துக்கள். இந்த அற்புதமான பெண்ணை பெற்ற நான் அதிர்ஷ்டசாலி . அவரை வளர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உன்னை சந்திரனுக்கு அப்பாற்பட்ட அளவுக்கு நேசிக்கிறேன். வாழ்க்கை என்ற விளையாட்டில் நீ வெற்றி பெற உனது அனைத்து தேவைகளையும் நான் அளிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார் பூஜா குமார்.