தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

தமிழில் இந்த ஆண்டில் வெளிவந்த 'ரிபெல்' படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு முன்னதாக வெளியான மலையாளப் படமான 'பிரேமலு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் மமிதா பைஜு.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'வணங்கான்' படத்தில்தான் முதன்முதலில் தமிழில் நடிக்க ஒப்பந்தமானார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி முதல்கட்டப் படப்பிடிப்பிலேயே பாலா, சூர்யா இடையே கருத்து மோதல் ஏற்பட்டு படத்தின் தயாரிப்பிலிருந்தும், நடிப்பதிலிருந்தும் சூர்யா விலகினார். அதன்பின் மொத்த நடிகர்கள், நடிகையரையும் மாற்றி படத்தை எடுத்து முடித்துள்ளார். அந்த மாற்றத்தால் மமிதாவும் அப்படத்தில் நடிக்கவில்லை.
இதனிடையே, விஜய்யின் 69வது படத்தில் மமிதா பைஜு நடிப்பதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதையடுத்து “விஜய்தான் தன்னுடைய அபிமான நடிகர், அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்தவர் நாள். 'கில்லி' படத்திலிருந்தே அவரை மிகவும் பிடிக்கும்,” என மமிதா மலையாளத்தில் கொடுத்த ஒரு பேட்டியை விஜய் ரசிகர்கள் பகிர்ந்தனர்.
இதையடுத்து, சூர்யாவைப் பற்றி மமிதா தமிழில் பேட்டி அளித்த ஒரு வீடியோவை சூர்யா ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர். அதில், தனக்கு சூர்யா எந்த அளவிற்குப் பிடிக்கும் என்பதையும், அவரை முதன்முதலில் பார்த்த அனுபவத்தையும், ஜோதிகாவை சந்தித்த அனுபவத்தையும் பற்றி மகிழ்ச்சி பொங்க பேசியுள்ளார். மமிதாவுக்கு சூர்யாவைத்தான் அதிகம் பிடிக்கும் என்றும் சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சூர்யாவின் படத்தில் ஒப்பந்தமாகியும் நடிக்க முடியாமல் போனது, விஜய்யின் படத்தில் நடிக்க உள்ளது என அடுத்து ஏதாவது ஒரு வீடியோவில் பேசி மமிதா சமாளித்தாக வேண்டும்.