மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் |
சினிமா தமிழகத்துக்குள் வந்ததும் முதலில் புராண கதைகள்தான் சினிமா ஆனது. பின்னர் சமூக கதைகள் வந்தது. இந்த வரிசையில் இப்போது கொண்டாடப்படும் பக்கா ஆக்ஷன் படமாக முதலில் வெளிவந்தது 'மெட்ராஸ் மெயில்' என்கிற படம். நாயகன், நாயகி, காதல், அதற்கு எதிராக ஒரு வில்லன். அந்த வில்லனை எதிர்த்து போராடும் ஹீரோ. காதலுக்கு டூயட் பாடல்கள், வில்லனோடு அனல் பறக்கும் சண்டை என்கிற இந்த பார்முலாவை தொடங்கி வைத்த படம் இது.
படத்தின் நாயகன் ரொம்ப நல்ல இளைஞர். எல்லோருக்கும் உதவி செய்யும் பரமோபகாரி. அவருக்கு ஜமீன்தார் மகளான நாயகிக்கும் முதலில் மோதல் உருவாகி பின்னர் அது காதலாகிறது. நாயகியின் அழகில் மயங்கும் மந்திரி ஒருவர் அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் ஹீரோ மீது பழிசுமத்தி சிறைக்கு அனுப்புகிறார். சிறையில் இருந்து தப்பும் ஹீரோ தனது பெயரை 'மெட்ராஸ் மெயில்' என்று மாற்றிக் கொண்டு அமைச்சரை பழிவாங்கி, நாயகியை மணந்து மக்களிடையே மெட்ராஸ் மெயில் என கொண்டாடப்படுகிற ஒருவராக மாறுகிறார். இதுதான் படத்தின் கதை. இதே கதையில் வரும் வாரம்கூட ஒரு படம் வரக் கூடும்.
1936ம் ஆண்டு வெளியான இந்த படத்தை சி.எம்.திரிவேதி இயக்கியிருந்தார் அப்போது தற்காப்பு கலைஞராக இருந்த பேட்டலிங் மணி என்பவர் நாயகனாக நடித்தார். அவரே கதையையும் எழுதியிருந்தார். நாயகியாக டி.என்.மீனாட்சி நடித்திருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.