குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து |

சமூக அக்கறை பற்றி மேடைகளில் வாய் கிழியப் பேசும் சில சினிமா பிரபலங்கள் அவர்கள் துறையிலேயே அந்த அக்கறையைக் காட்டுவதில்லை. திரைப்படங்களில்தான் புகை, குடி என காட்சிகளை வைக்கிறார்கள் என்றால் போஸ்டர்களில் கூட அவற்றை வைத்து இளைய தலைமுறையைக் கெடுக்கும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பும் சில முன்னணி நடிகர்களின் படங்களின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியான போது இப்படி புகை, குடி போஸ்டர்கள் இடம் பெற்றதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இப்படி போஸ்டர்களை வெளியிட்டு அதன் மூலம் எழும் சர்ச்சையை வைத்து இலவச விளம்பரம் தேடிக் கொள்வதையும் சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது 'டிராகன்' பட போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. நேற்றைய விஜயதசமி நாளில் வெளியான இப்படத்தின் போஸ்டர்களில் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. ஒரு பண்டிகை நாளில் இப்படியான போஸ்டர்களை வெளியிடுகிறோமே என்ற ஒரு யோசனையும் இல்லாமல் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர்.