தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய படம் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்'. பாயல் கபாடியா இயக்கி இருந்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை இந்த படம் பெற்றது. இதில் நடித்திருந்த கனி குஸ்ருதி சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.
மும்பையில் பணியாற்றும் இரண்டு மலையாளி நர்சுகளின் கதை. ஒருவர் கணவர், குடும்பம் என்று வாழ்கிறவர். இன்னொருவர் சுதந்திரமானவர் விருப்புகிறவருடன் வாழ்கிறவர். இவர்களின் வாழ்க்கையின் மூலம் இன்றைய பெண்களின் நிலை பற்றி பேசுகிற படம்.
தற்போது இந்த படத்தை நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இந்தியாவில் வெளியிடுகிறது. வருகிற நவம்பர் 22ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீடு குறித்து இயக்குனர் பாயல் கபாடியா கூறும்போது "இந்த படத்தை செதுக்க பல வருடங்கள் எடுத்துக் கொண்டோம். மேலும் ஸ்பிரிட் மீடியாவுடனான இணைந்திருப்பது படத்தை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் எடுத்து செல்லும் என்பதில் உற்சாகமாக இருக்கிறோம். என்னுடைய படம் இந்தியத் திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை. இந்திய பார்வையாளர்கள் திரையரங்குகளில் டிக்கெட் வாங்கி பெரிய திரையில் படத்தைக் கொண்டாடுவதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்றார்.
ராணா டகுபதி கூறும்போது “இந்தியத் திரையரங்குகளில் இந்த சிறந்த படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள கதைகளைக் கொண்டு வருவதை ஸ்பிரிட் மீடியா நோக்கமாகக் கொண்டுள்ளது. பாயலின் அழகான இந்தத் திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்” என்றார்.