நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரியங்கா திரிவேதி என்ற பிரியங்கா உபேந்திரா. இவர் 2003ல் கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்தார். பெங்காலி, ஹிந்தி படங்களில் நடித்து 'சூரி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு வந்தார். 'ராஜ்யம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன்பிறகு 'ராஜா' என்ற படத்தில் அஜித் ஜோடியாக நடித்தார். பின்னர் 'காதல் சடுகுடு', 'ஜனனம்' படத்தில் நடித்தார். 2004ம் ஆண்டு வந்த 'ஜனனம்' படம்தான் அவர் கடைசியாக நடித்த தமிழ் படம்.
தற்போது 20 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வருகிறார். கன்னடத்தில் இவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து வரும் 'உக்ரவர்ததா' என்ற படம் தமிழில் 'உத்ராவதாரம்' என்ற பெயரில் வெளிவருகிறது. இந்த படத்தை குருமூர்த்தி என்பவர் இயக்கி உள்ளார். அஜய், சுமன், பவித்ரா லோகேஷ், பவன் ஆச்சார்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் பிரியங்கா அதிரடி பெண் போலீசாக நடித்துள்ளார். அடுத்த மாதம் வெளிவருகிறது. இதன் தமிழ் புரமோசனுக்காக தற்போது சென்னை வந்துள்ளார் பிரியங்கா.