மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் 'அமரன்'. இப்படம் 200 கோடி வசூலைக் கடந்ததாக கடந்த வாரம் நவம்பர் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் சூர்யா 'கங்குவா' படம் வெளிவந்தாலும் 'அமரன்' படத்திற்கான தியேட்டர் வரவேற்பு குறையவில்லை என்கிறார்கள். மூன்றவாது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள 'அமரன்' படம் வார முடிவில் 300 கோடி வசூலைக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதுதான் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
275 கோடி வரையில் தற்போது வசூலாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் இரண்டு நாட்களிலும் அதிக வசூல் எதிர்பார்க்கப்படுகிறதாம். அதற்கேற்ற விதத்தில் ஆன்லைன் முன்பதிவும் நடந்துள்ளதையும் பார்க்க முடிகிறது. ஓரிரு நாட்களில் இப்படம் 300 கோடி வசூலைக் கடந்துள்ளது என்ற அறிவிப்பு வரலாம்.