ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகனின் உதவியாளர் எழில் பெரடி இயக்கி உள்ள படம் 'பராரி'. இதில் புதுமுங்கள் ஹரி, சங்கீதா, புகழ் மகேந்திரன் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். வருகிற 22ம் தேதி படம் வெளிவருகிறது.
இதை தொடர்ந்து படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் எழில் பெரியவெடி பேசும்போது “இந்தப் படத்தை 'ஜிப்ஸி' படத்தில் பணியாற்றியபோதே எழுதி முடித்துவிட்டேன். நான் பிற தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி முடிக்கும் வரை ராஜூமுருகன் வெளியே காத்திருப்பார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் என தெரியவில்லை. நான் கதை சொன்ன எல்லோருக்குமே கதை பிடித்திருந்தது. ஆனால், ஏதோ ஒரு இடத்தில் தயக்கம் இருந்தது. பின்புதான் ராஜூமுருகன் சார் ஹரியை உள்ளே கொண்டு வந்து இரண்டு பேரும் சேர்ந்து படத்தைத் தயாரித்தார்கள்.
அவர் இந்தப் படத்திற்காக எடை குறைத்தார். திருவண்ணாமலை மக்களையும் உள்ளே கொண்டு வந்து இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். கதைக்காக அனைத்து நடிகர்களுக்கும் ரிகர்சல் கொடுத்தோம். 'ஜோக்கர்' படத்தில் இருந்தே ஷான் ரோல்டன் எனக்கு நல்ல பழக்கம். அவரும் பாடலாசிரியர் உமாதேவியும் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை.
இந்த படத்திற்கு மண் சார்ந்த நல்ல தமிழ் பேசக்கூடிய ஹீரோயின் தேடினேன். திருவண்ணாமலையில் அலுவலகம் அமைத்து சுமார் 2 ஆயிரம் பெண்கள் வரை வரவழைத்து ஆடிசன் செய்தும் சரியான ஹீரோயின் கிடைக்கவில்லை. கடைசியாகத்தான் சங்கீதா வந்தார். ஆனால் அவர் நல்ல மேக்அப் போட்டு அழகாக வந்தார். ஆனால் என் படத்திற்கு சற்று அழகு குறைவான பெண்தான் வேண்டும், இதை அவரிடம் சொல்லி மேக்அப்பை கலைத்து வரச் சொன்னேன். அவர் அப்படி வந்ததும் அவரிடம் என் கதை நாயகியை கண்டேன். பிரமாதமாக நடித்திருக்கிறார்.
இந்த பூமிக்கு நாம் எல்லோருமே விருந்தினர்கள் தான். எதுவுமே நமக்கு சொந்தம் கிடையாது. நாம் பூமியை விட்டு போகும்போது எதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் 'பராரி' படத்தின் நோக்கம். இது எங்களின் கூட்டு முயற்சி. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்." என்றார்.
இந்த படம் திருவண்ணாமலை பகுதியில் இருந்து பெங்களூருக்கு வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் பற்றியும், அவர்களுக்குள் இருக்கும் ஜாதி மோதல், காதல் இவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டு உள்ளது.