தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சென்னை:பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து சிலர் அவதுாறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளதாகவும், அதை அதிகபட்சம் 24 மணி நேரத்தில் நீக்காவிட்டால், சட்ட நடவடிக்கை பாயும்' என ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். அதை தன் எக்ஸ் தள பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏ.ஆர்.ரஹ்மான் சில நாட்களுக்கு முன் அவரது விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த தகவலை முன்னணி நாளிதழ்கள் உட்பட பலரும் செய்தியாக வெளியிட்டனர். ஆனால், சில சமூக வலைதள பயன்பாட்டாளர்களும், பல யூ-டியூபர்களும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவதுாறு கருத்துகளை, தங்களின் சொந்தக் கற்பனைக்கு உட்படுத்தி, பல கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், குடும்பத்தாரை புண்படுத்தும் வகையிலும், வெளியிடப்பட்ட அப்பதிவுகளில் துளி அளவும் உண்மையில்லை. இது ஒரு மலிவான செயல்.
அடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து குறித்த அவதுாறு கருத்துகளை சமூக வலைதளங்கள், யூ-டியூப்பிலிருந்து அகற்ற வேண்டும். அப்படி அகற்றாதவர்கள் மீது பாரதிய நியாயா சன்ஹிதா 356வது பிரிவின் கீழ் அவதுாறு வழக்கு தொடுக்கப்படும். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். குறிப்பாக யூ-டியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஆன்லைன் செய்தி இணையதளங்கள் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் தனி நபர்கள், நிறுவனங்களுக்காக இந்த நோட்டீஸ் அனுப்பபடுகிறது. தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.