தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான கிருஷ்ணா, 'அலிபாபா, கழுகு, வல்லினம், வன்மம், யாக்கை, பண்டிகை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 'ஜோஸ்வா இமை போல் காக்க' படத்தில் வில்லனாக நடித்தார். தற்போது வெப் தொடர்களை தயாரித்து வருகிறார்.
ஏற்கெனவே 'ஹெ பிரஸ்டீஸ், லாக்டு, ஜான்சி' தொடர்களை தயாரித்த அவர் தற்போது குழந்தைகளுக்கான தொடராக 'பாராசூட்' என்ற தொடரை தயாரித்துள்ளார். நாளை டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்த தொடரில், கிஷோர், கனி, காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், பாவா செல்லதுரை உட்பட பலர் நடித்துள்ளனர்.
இரண்டு சிறுவர்களின் உலகைப் பற்றியதாக உருவாகியுள்ளது இந்த வெப் தொடர். குழந்தைகளின் மீது அன்பு வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டுமென கண்டிப்பு காட்டுகிறார்கள். இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல், பாராசூட் எனும் மொபட் பைக்கை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இதை ராசு ரஞ்சித் இயக்கியுள்ளார். ஸ்ரீதர் கே எழுதியுள்ள இந்த வெப் தொடருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.