மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
2018ம் ஆண்டில் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்து வெளிவந்த படம் '96'. பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதன்பின் கார்த்தி, அரவிந்த்சாமியை வைத்து ‛மெய்யழகன்' என்ற படத்தை இயக்கினார் பிரேம். இந்தபடமும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 96 படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அது உருவாவது உறுதியாகியுள்ளது. இந்த பாகத்தை பிரேம் குமார் இயக்க விஜய் சேதுபதி, த்ரிஷா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் . கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆனால், முதல் பாகத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த பாகத்தை தயாரிக்கவில்லை. இவர்களுக்கு பதிலாக தற்போது இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டாவுன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்கிறார்கள்.