தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை தன்னுடைய ஆவணப்படத்தில் நயன்தாரா பயன்படுத்தியதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்ஓசி தரவில்லை. அதோடு அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்து 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் என நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தனுஷை கடுமையாக விமர்சித்தார். மேலும் நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இடையே நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கில் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இப்படியான நிலையில் நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அந்த பதிவில்பொய் சொல்லி ஒருத்தரின் வாழ்க்கையை நீங்கள் அளிக்கும்போது அதை கடனாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த கடன் வட்டியுடன் உங்களுக்கு திரும்பி வரும். கர்மா ஒருபோதும் விடுவதில்லை என்று கோடிட்டு காட்டியுள்ளார் நயன்தாரா.
அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து தனுஷை தான் மறைமுகமாக இப்படி அவர் சாடி உள்ளார் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.