5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ம் தேதி வருகிறது. அன்றைய தினம் அவருடைய இரண்டு படங்களின் 'அப்டேட்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று, அவர் தற்போது நடித்து வரும் 'கூலி' படத்தின் அப்டேட், இரண்டாவது, அடுத்து அவர் நடிக்க உள்ள 'ஜெயிலர் 2' படத்தின் அப்டேட்.
70 வயதைக் கடந்த போதிலும் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர், அதிக வசூலைத் தரும் நடிகர்களில் ஒருவர் என்ற பெருமையை கடந்த பல வருடங்களாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அவர் தற்போது நடித்து வரும் 'கூலி' அவரது 171வது படமாக உருவாகி வருகிறது. அடுத்து உருவாக உள்ள 'ஜெயிலர் 2' அவரது 172வது படம். இந்தப் படங்களுக்குப் பிறகும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க சில இயக்குனர்களுடன் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.