ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! |

2024ம் ஆண்டின் கடைசி மாதத்தில் வந்துவிட்டோம். இந்த மாதத்தில் உள்ள 4 வெள்ளிக்கிழமைகளில் எத்தனை படங்கள் வெளியாகும் என்பது போகப் போகத்தான் தெரியும்.
டிசம்பர் 13, 20, 27 ஆகிய நாட்களில் வெளியாக உள்ள சில படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டது. “ராஜா கிளி, சூது கவ்வும், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், 2 கே லவ் ஸ்டோரி, விடுதலை 2, திரு.மாணிக்கம், பாட்டல் ராதா, கஜானா” ஆகிய படங்கள் அந்த நாட்களில் வெளியாக உள்ள படங்களாக இருக்கும்.
இந்த வாரம் டிசம்பர் 6ம் தேதி ஓரிரு தமிழ்ப் படங்கள்தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'பேமிலி படம், பிளட் அன்ட் பிளாக்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 5ம் தேதி தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வெளியாக உள்ள 'புஷ்பா 2' படத்திற்காக தமிழ்ப் படங்கள் வழிவிட்டது போல உள்ளது. இப்படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் சுமார் 800 தியேட்டர்களில் வெளியிடுகிறது. எனவே, வேறு தமிழ்ப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.