ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
மாடலிங் மற்றும் நடனத் துறையில் முத்திரை பதித்தவர் தேஜூ அஸ்வினி. அதன்பிறகு சினிமாவுக்கு வந்து 'என்ன சொல்ல போகிறாய்', 'பாரிஸ் ஜெயராஜ்' படங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'பிளாக் மெயில்' படத்தில் நடித்துள்ளார். அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணை நம்பாதே' படத்தை இயக்கிய மு.மாறன் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் அமல்ராஜ் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கிறார்; கோகுல் பெனாய் படத்தின் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார்.
தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளது. இதுகுறித்து இயக்குநர் மு. மாறன் கூறும்போது, “திட்டமிட்டபடி படம் சரியான வேகத்தில் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. நடிகர், இசையமைப்பாளர் என ஜிவி பிரகாஷ் பிஸியாக இருந்தாலும் இந்தப் படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்" என்றார்.