மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'புஷ்பா 2'. இப்படத்திற்கான பின்னணி இசை குறித்து படம் வெளிவருவதற்கு முன்பு சர்ச்சை வெடித்தது. முதல் பாகத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் தான் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்து வந்தார்.
ஆனால், பின்னணி இசையை அவர் அமைக்கவில்லை என்றும் வேறு மூன்று இசையமைப்பாளர்கள் அமைக்கிறார்கள் என்றும் தகவல் வெளியானது. இசையமைப்பாளர் தமன் கூட ஒரு நிகழ்ச்சியில் 'புஷ்பா 2' படத்திற்கு சில காட்சிகளுக்கு பின்னணி இசை அமைத்து வருவதாகப் பேசியிருந்தார்.
சென்னையில் நடந்த விழாவில் இந்த சர்ச்சை குறித்து தயாரிப்பாளரைக் குறிப்பிட்டு நேரிடையாகப் பேசினார் தேவி ஸ்ரீ பிரசாத். படம் வெளியாகும் வரை படத்திற்கான பின்னணி இசையை யார் அமைத்தது என்ற தகவல் வெளியாகவில்லை.
படம் வெளியான பின் டைட்டில் கார்டில், இசை- பின்னணி இசை தேவி ஸ்ரீ பிரசாத் என்றும் கூடுதல் பின்னணி இசை - சாம் சிஎஸ் என்றும் வருகிறது. இதனிடையே எந்தக் காட்சிக்கு யார் பின்னணி அமைத்தது என்பது குறித்து ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் குழப்பம் நிலவி வருகிறது.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் சாம் சிஎஸ், “இது தேவி ஸ்ரீ பிரசாத் படம்தான். இருந்தாலும் படத்தின் 90 சதவீதக் காட்சிகளுக்கு தான் இசையமைத்ததாகவும், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் தன்னுடைய இசைதான்,” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்று அவரது எக்ஸ் தளத்தில், “மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி,” என்று பதிவிட்டுள்ளார். 'புஷ்பா 2' படத்தின் எந்த நிகழ்வுகளிலும் அவரைப் பற்றி யாரும் பேசாதது குறித்தும், அவர்தான் முக்கிய பின்னணி இசை என யாரும் குறிப்பிடாதது குறித்தும் இப்படி பதிவிட்டுள்ளார் என்று தெரிகிறது.