சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல கன்னட நடிகரின் ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ்குமார் கடந்த 1974ல் வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாண' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது வரை 125க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினி உடன் ‛ஜெயிலர்', தனுஷ் உடன் ‛கேப்டன் மில்லர்' ஆகிய படங்களிலும் நடித்தார்.
சமீபத்தில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவிற்கு கடந்த 19ம் தேதி சென்றார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவின் மியாமி இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சிவராஜ்குமார். அவருக்கு வெற்றிகரமாக சிறுநீரக புற்றுநோய் அறுவை சிகிச்சை நடந்து முடிவடைந்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகேஷ் மனோகரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
அதில், "சிவராஜ்குமாரின் உடல்நிலை குறித்த அறிவிப்பை பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதில் அவருக்கு சிறுநீர்ப்பை அகற்றப்பட்டு செயற்கை சிறுநீர்ப்பை பொருத்தப்பட்டுள்ளது. சிவராஜ்குமார் தற்போது சீரான நிலையில் நலமுடன் இருக்கிறார், விரைவில் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் " என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சிவராஜ்குமார் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛சிவராஜ்குமாருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அவர் நலமாக உள்ளார், குணமடைந்து வருகிறார். ரசிகர்கள், நலம் விரும்பிகளின் ஆதரவுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.