அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் | படத்தை பார்க்காமலேயே மறைந்த ஷிஹான் ஹுசைனி | '3BHK' படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த் | உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன் | தணிக்கை சான்றிதழ்களில் திருத்தம்: வாரியம் முடிவு |
பாலிவுட் நடிகரான சைப் அலிகான் கடந்த வாரம் அவரது வீட்டில் திருட வந்த ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுசை சிகிச்சை முடிந்த பின் நேற்று வீட்டிற்குத் திரும்பினார்.
தற்போது அவருடைய வீட்டிற்கான பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார் சைப் அலிகான். பாலிவுட் நடிகரான ரோனித் ராய்க்கு சொந்தமான செக்யூரிட்டி நிறுவனம் அவரது வீட்டு பாதுகாப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாம். இதற்காக ரோனித் ராய் நேற்று சைப் அலிகானை சந்தித்துப் பேசியுள்ளார். அமிதாப்பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் ஆகியோரது வீட்டிற்கு ரோனித் ராயின் செக்யூரிட்டி நிறுவனம்தான் பாதுகாப்பை அளித்து வருகிறது.
சைப் அலிகான் வீட்டில் நடந்த திருட்டு முயற்சியும் அதனால் நடந்த கத்திக்குத்து சம்பவமும் பாலிவுட் பிரபலங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.