நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்த படம் அமரன். இந்த படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்ட கதையில் உருவானது. இந்த நிலையில் தற்போது சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி என்ற படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் ரவி மோகன் வில்லனாகவும், ஸ்ரீ லீலா கதாநாயகியாகவும், அதர்வா முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.
இந்த பராசக்தி படம் 1965களில் நடந்த கதைக் களத்தில் உருவாகிறது. அதாவது 1965ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி ஹிந்தி மொழி திணிப்பை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது மற்றும் மதுரையில் ஹிந்தி மொழிக்கு எதிராக போராடிய மாணவர்களின் மீது தடியடி நடத்திய அரசை கண்டித்தும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி நடத்தி உள்ளார்கள். அந்த பேரணியின்போது மாணவர்கள் மீது காவல் காவல்துறையினர் தடியடி நடத்தியபோது, ராசேந்திரன் என்ற மாணவரின் நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரழந்துள்ளார்.
இந்த மொழிப் போரில் உயிரிழந்த ராசேந்திரனுக்கு 1969ம் ஆண்டில் அவரது தியாகத்தை நினைவூட்டும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திருவுருவச் சிலை திறந்து வைத்துள்ளார். மொழிப்போர் தியாகியான இந்த மாணவர் ராசேந்திரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தான் தற்போது சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படம் உருவாகிறது.
இதில், ராசேந்திரன் என்ற வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த வகையில் அமரன் படத்தை போலவே இந்த படமும் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது.