நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
ஓவர்நைட்டில் பிரபலம் என்று சொல்வார்களே அதற்கு சமீபத்திய உதாரணம் கடந்த வருடம் வெளியான பிரேமலு என்கிற ஒரே திரைப்படத்தின் மூலம் தனது க்யூட்டான நடிப்பால் இளம் ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை மமிதா பைஜு. வணங்கான் படத்திலிருந்து அவர் விலகியபோதே யார் இவர் என பேச வைத்தவர் பிரேமலு படம் வெளியான பிறகு பரபரப்பு வளையத்திற்குள் வந்தார். இப்போது விஜய் தற்போது நடித்த வரும் அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கோட்டயம் கிடங்கூரில் உள்ள தான் படித்த மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மமிதா பைஜு. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மமிதா, “உங்களையெல்லாம் பார்க்கும்போது என்னுடைய பள்ளி வாழ்க்கையை ரொம்பவே நான் மிஸ் பண்ணுகிறேன்” என்று கூறினார்.
அதுமட்டுமல்ல அங்கிருந்த ஒரு ஆசிரியை ஒருவர், மாணவிகளுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட முடியுமா எனக் கேட்க, “இங்கே ஆடாவிட்டால் எங்கே போய் ஆடுவது ?” என்று ஜாலியாக கூறிய மமிதா பைஜு மனசிலாயோ பாடலுக்கு மாணவிகளுடன் சேர்ந்து செமையாக ஆட்டம் போட்டார்..