பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாளத்தில் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக இயக்கிய டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வசூல் ரீதியாக மிகப்பெரிய உயரத்தை தொடாவிட்டாலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று சீரான ஓட்டத்தில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
துப்பறியும் டிடெக்டிவ் கதையம்சத்துடன் உருவாகி இருந்த இந்த படத்தின் திருப்புமுனைக்கு காரணமான நெகட்டிவ் சாயல் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வினீத். தமிழில் காதல் தேசம் படம் மூலம் பிரபலமான வினீத் நீண்ட நாளைக்கு பிறகு சந்திரமுகி படத்தில் தனது இருப்பை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார்.
அதன்பிறகு சமீப வருடங்களாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் வினீத். அந்த வகையில் வினீத் படத்தில் இடைவேளைக்கு பின் வந்து செல்லும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு பிரபல முகம் தேவை என கவுதம் மேனன் முடிவு செய்தபோது தனது பெயரை மம்முட்டி தான் அவரிடம் சிபாரிசு செய்தார் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் வினீத்.
“கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிப்பது எனது கனவாக இருந்தது. வழக்கமாக தான் நடிக்கும் படங்களின் ஸ்கிரிப்ட் படித்து விட்டு தான் ஒப்புக்கொள்வேன் என்றாலும் கவுதம் மேனன் படம் என்பதால் கேட்ட உடனே ஒப்புக்கொண்டேன். அதுமட்டுமல்ல மம்முட்டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் முதன்முதலாக நடிக்கிறேன் என்பதும் கூட இன்னொரு காரணம்” என்று கூறியுள்ளார் நடிகர் வினீத்.