விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

கேரளாவில் கொச்சியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் மிஹிர் முகமது என்பவர் தனது சக மாணவர்கள் சிலரால் கிண்டல் கேலிக்கு ஆளாக்கப்பட்டு தாக்குதலுக்கும் ஆளாகி அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டான். இந்த நிகழ்வு கேரளாவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவையும் தாண்டி பல பிரபலங்கள் இறந்து போன மாணவனுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் இந்த நிகழ்வு குறித்து தங்களது கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சோசியல் மீடியா பதிவில், “இந்த 2025ல் இன்னொரு இளம் உயிரை நாம் இழந்துள்ளோம். சிலரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, ஆணவம் காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இதுபோன்று மனரீதியாக, உணர்வு ரீதியாக, சில சமயம் உடல் ரீதியான இது போன்ற துன்புறுத்தல்களும் கொடுமைப்படுத்தலும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதை வெறும் இரங்கல்களுடன் கடந்து செல்ல கூடாது. நிச்சயம் நடவடிக்கை தேவை. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் அடி ஆழத்திலிருந்து விசாரிப்பார்கள் என நம்புகிறேன். மிஹிர் முகமதுக்கு நீதி வேண்டும் என்று கூறியுள்ளார்.