நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
வரலாற்று புகழ் மிக்க மனிதர்களாக தங்களை உருவகப்படுத்திக் கொண்டு வாழ்கிறவர்கள் தனி ரகம். மனிதர்களில் இவர்கள் வித்தியாசமானவர்கள். குறிப்பாக இன்னமும் எம்ஜிஆர் போன்று தொப்பி, கண்ணாடி அணிந்து கொண்டும் வாழும் நபர்களை பார்க்க முடியும், 80களின் இளைஞர்களில் சிலர் ரஜினியாக தங்களை உருவகப்படுத்திக் கொண்டு வாழ்ந்தார்கள். இப்படியான கேரக்டர்கள் சினிமாவில் மிக அரிதாகவே காட்டப்பட்டிருக்கிறது.
'புன்னகை மன்னன்' படத்தில் கமல்ஹாசன் சார்லி சாப்ளினாக தன்னை உருவகப்படுத்திக் கொண்ட ஒரு கேரக்டரில் நடித்தார். அதேபோன்று சிவாஜி நடித்த படம் 'ஹிட்லர் உமாநாத்'. ஹிட்லராக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளும் மனிதர். அவர் போலவே மீசை வைத்துக் கொண்டு, அவரைப்போலவே நடந்து, பேசி கண்டிப்பான குடும்பத்தலைவராக இருக்கிறார். அப்படிப்பட்டவருக்கு ஹிட்லரின் உண்மையான முகம் தெரியவரும்போது என்ன ஆகிறார் என்பதுதான் ஹிட்லர் உமாநாத்தின் கதை.
இந்த கதையை இயக்குனர் மகேந்திரன் எழுதியிருந்தார். பி.மாதவன் இயக்கி இருந்தார். சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, சத்யராஜ், சுருளிராஜன், சாதனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். படத்தில் சிவாஜியின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படம் உரிய வரவேற்பை பெறவில்லை.