ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவின் வெள்ளி விழா படங்களில் முக்கியமானது 'பயணங்கள் முடிவதில்லை'. கோவையை சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன் என்ற இளைஞர் சினிமா கனவில் 'பயணங்கள் முடிவதில்லை' என்ற கதையை வைத்துக் கொண்டு அதற்காக தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருந்தபோது அப்போது கோவை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தயாராக இருந்த கோவை தம்பியை சந்தித்து கதை சொன்னார். அவரும் "தம்பி நான் எம்.எல்.ஏ, எம்பி, அமைச்சர் இப்படி ரூட் போட்டிருக்கேன் சினிமால இண்ட்ரஸ்ட் இல்லை" என்று கூறியிருக்கிறார். ஒரு வழியாக கடைசியாக "படத்திற்கு இளையராஜா மியூசிக் போட்டா தயாரிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
நேராக சென்னை வந்த சுந்தர்ராஜன், கங்கை அமரன் மூலம் இளையராஜாவை சந்தித்து கதை சொல்ல, கதை அவருக்கு பிடித்துப்போகிறது. காரணம் படத்தின் நாயகன் ஒரு பாடகன். இளையராஜா ஒப்புக் கொண்டதும் பணிகள் ஆரம்பித்தது. அப்போது 'பன்னீர் புஷ்பங்கள்' படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அதில் நடித்த சுரேஷை ஹீரோவாக போடலாம் என்று தயாரிப்பாளர் சொல்ல, சுந்தர்ராஜனும் - சுரேஷை சந்திக்க சென்றார். அப்போது சுரேஷ் ஒரு கார் விபத்தில் சிக்கி எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு மாதங்கள் வரை அவருக்காக காத்திருக்க முடியாது என்று கருதிய சுந்தர்ராஜன், அப்போது கமல்ஹாசன் போன்ற தோற்றதுடன் வலம் வந்து கொண்டிருந்த மோகனை நடிக்க வைத்தார்.
இந்த படத்திற்கு பிறகுதான் மோகன், மைக் மோகனாகவும், வெள்ளி விழா நாயகனாகவும் ஆனார். நாயகியாக பூர்ணிமா தேர்வானார். ஆனால் அவரும் புதிய இயக்குனர், தயாரிப்பாளர் என்பதால் தயங்கினார். ஆனால் கங்கை அமரன் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து 'படம் மியூசிக்கல் சப்ஜெக்ட் ராஜா இசை அமைக்கிறார். பாட்டெல்லாம் ரெடி' என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தார். அதன்பிறகு படம் வெளியான தியேட்டர்களில் எல்லாம் 100 நாள்கள் ஓடியதும் கோவையில் ஒரு தியேட்டரில் 400 நாட்கள் ஓடியதும் வரலாறு.
ஒருவேளை சுரேஷ் இந்தப் படத்தில் நடித்திருந்தால் மோகன் இடத்தை அவர் பிடித்திருக்கலாம்.