கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
நடிகர் சிரஞ்சீவியும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளனர். அவற்றில் பல சூப்பர் ஹிட் படங்கள். குறிப்பாக ரசிகர்களுக்கு இந்த ஜோடி ரொம்பவே பிடித்தமான ஜோடியாக வலம் வந்தது. அந்த சமயத்தில் இயக்குனர் கோதண்டராமி ரெட்டி சிரஞ்சீவியை வைத்து கொண்ட 'வீட்டி தொங்கா' என்கிற படத்தை இயக்க முடிவு செய்தார். இந்த படத்தின் கதாநாயகி ஒரு போலீஸ் அதிகாரி. கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இது உருவாக்க பட்டிருந்தது. இதில் ஸ்ரீதேவி நடித்தால் சரியாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர், ஸ்ரீதேவியிடம் சென்று கதையை கூறினார். ஸ்ரீதேவிக்கும் இந்த கதாபாத்திரம் ரொம்பவே பிடித்து விட்டது.
அதேசமயம் கதாநாயகியை முக்கியப்படுத்தி இந்த படத்தின் கதை இருப்பதால் படத்தின் டைட்டிலை 'வீட்டி ராணி' என்று மாற்றும்படி இயக்குனரிடம் கேட்டார். ஆனால் தெலுங்கு திரையுலகை பொருத்தவரை ஹீரோவை முன்னிலைப்படுத்தியே தான் நகர்ந்து வருகிறது. அதனால் சிரஞ்சீவியை மையப்படுத்தி தான் டைட்டில் இருக்க வேண்டும் என கூறிய கோதண்டராமி ரெட்டி, ஸ்ரீதேவியின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். ஆனாலும் ஸ்ரீதேவி தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ளாமல் இந்த படத்தில் நடிக்க தான் விரும்பவில்லை என்று கூறி விலகிக் கொண்டார்.
அதன் பிறகு அவருக்கு பதிலாக நடிகை விஜயசாந்தி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். படமும் கொண்ட வீட்டி தொங்கா என்கிற டைட்டிலில் தான் வெளியானது. ஆனால் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படம் விஜயசாந்தியின் திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் அவர் நடித்திருந்த போலீஸ் கதாபாத்திரம் தான் அவரை வைத்து 'கர்த்தவ்யம்', அதாவது தமிழில் 'வைஜெயந்தி ஐபிஎஸ்' என்கிற அதிரடி போலீஸ் கதாபாத்திரத்தை அவருக்கு தேடிக்கொண்டு வந்தது. மிகப்பெரிய புகழையும் சேர்த்தது என்பது என்பது மறுக்க முடியாத உண்மை.