சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு |
இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலத்தில் அங்கிருந்து வந்த அகதிகள் பற்றிய பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அவர்களுக்கு தனிமுகாம் அமைத்துக் கொடுத்து இன்று வரை அரசு பாதுகாத்து வருதுகிறது. இதே மாதிரி இரண்டாம் உலகப்போர் நடந்தபோது பர்மாவில் இருந்து இந்தியா வந்த அகதிகளை பற்றி முதன் முதலில் பேசிய படம் 'மானஸம்ரக்ஷணம்'.
தமிழர்கள் உலகம் முழுக்க சென்று தங்கள் உழைப்பால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவி அங்கேயே செட்டிலாகி இருக்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என இந்த பட்டியல் நீளமானது. அந்த வரிசையில் தமிழர்கள் பர்மாவிலும் குடியேறி அந்த நாட்டுக்காக உழைத்து அங்கேயே செட்டிலானார்கள்.
இரண்டாம் உலகப்போர் நடந்த போது ஜப்பான் பர்மாவை கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிர் அணியில் இருந்த ஜப்பான் பர்மாவில் வாழும் இந்தியர்களை குறிப்பக தமிழர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தது. இதனால் தமிழர்கள் காடு, மலைகளை கடந்து பின்னர் மறைமுகமாக கடல் கடந்து இந்தியா வந்தார்கள். இந்த அகதிகளின் பயணத்தை மையமாக வைத்து உருவானதுதான் இந்த படம்.
இந்த பயணத்தின் போது படத்தின் நாயகி எஸ்.டி.சுப்புலட்சுமி, கொடுமையான பயணத்தில் பெரியவர்கள் கொல்லப்பட்டு விடக்கூடும். இதனால் நம் சந்ததிகளாவது தாய் நாடு திரும்ப வேண்டும் என்று நினைத்து 'மானஸம்ரக்ஷணம்' என்ற அமைப்பை தொடங்குகிறார். எல்லோருடைய குழந்தைகளையும் தாய்நாட்டில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இதில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன், ஜி.பட்டு அய்யர், வி.என்.ஜானகி, டி.ஆர்.ராமச்சந்திரன், காளி என்.ரத்னம், டி.கே.சம்பங்கி, எம்.ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.பி.ராவ், எம்.ஏ.கணபதி பட், வி.எஸ்.சந்தானம் அய்யங்கார், ஆர்.ராமானுஜா சாரியார், ச.ராமானுஜா சாரியார், சலட்சுமி, சலட்சுமி, வி.ஏ. 'குமாரி' சுப்புலட்சுமி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கே.சுப்பிரமணியம் இயக்கி இருந்தார். தியாகராஜன் இசை அமைத்திருந்தார், தாம்பு ஒளிப்பதிவு செய்திருந்தார். பின்னாளில் 2015ம் ஆண்டில் தனுஷ் நடித்த 'அனேகன்' படம் பர்மா தமிழர்களை மையமாக கொண்டு வெளியானது.