பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் |
சமீபகாலமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏஐ மூலமாக தாங்கள் விரும்பிய நட்சத்திரங்களின் முகங்களுடன் கூடிய புகைப்படங்களையும் டீப் பேக் வீடியோக்களையும் பலர் உருவாக்கி சோசியல் மீடியா மூலமாக வெளியிட்டு வருகின்றனர். அவர்களது குரலையும் கூட ஒரிஜினல் போன்று உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். பல வீடியோக்களில் எது ஒரிஜினல், எது போலி என்று தெரியாத அளவிற்கு இருப்பதால் சினிமா பிரபலங்களுக்கு பல நேரங்களில் மிகப்பெரிய சங்கடங்கள் ஏற்படுகின்றன. அப்படி சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனின் ஏஐ வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வித்யா பாலன், “ இந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல.. சமீபகாலமாக இதுபோன்ற ஏஐ வீடியோக்கள் வெளியாகி தேவையில்லாத சங்கடத்தை உருவாக்குகின்றன. அதனால் இதுபோன்ற வீடியோக்களில் சொல்லப்படும் கருத்துக்கள் என்னுடையது அல்ல மற்றும் என் அனுமதியின் பேரில் கூட இவை உருவாக்கப்படுவது இல்லை. அதனால் ரசிகர்கள் என்னுடைய வீடியோக்கள் போன்று இப்படி எதுவும் வெளியானால் அது தன்னுடையது தானா என அதை நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு அதை நம்பவோ மற்றவர்களுக்கு பகிரவோ செய்யுங்கள்” என்று ஒரு எச்சரிக்கை தகவலை பகிர்ந்துள்ளார்.