சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
2025ம் ஆண்டில் தியேட்டர்களில் இதுவரையில் 45 படங்கள் வெளியாகி உள்ளன. நாளை வெளியாக உள்ள 8 படங்களையும் சேர்த்தால் 50 படங்களைக் கடந்துவிடும். இந்த ஆண்டின் 9 வார முடிவில் 50 படங்கள் வெளியீடு என்பது அதிகம்தான்.
கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் நேரடியாக வெளியாவது ஆரம்பமானது. அடுத்த இரண்டு வருடங்கள் வரை அது குறிப்பிடும் எண்ணிக்கையில் இருந்தது. ஆனால், கடந்த மூன்று வருடங்களாக ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் எந்த ஒரு படமும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவில்லை. முதல் படமாக ஏப்ரல் 4ம் தேதி 'டெஸ்ட்' படம் வெளியாக உள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட படம் இது. 2025 பிரிமீயர் லீக் கிரிக்கெட் சீசன் ஆரம்பமானதும் இப்படம் வெளியாவது பொருத்தமான ஒன்று. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது. தயாரிப்பாளராக “தமிழ்ப்படம், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, தமிழ்ப்படம் 2, கேம் ஓவர், ஏலே, மண்டேலா,” என தரமான படங்களைக் கொடுத்த சஷிகாந்த் இயக்குனராக எப்படிப்பட்ட படத்தைக் கொடுக்கப் போகிறார் என்பது ஒரு மாதத்தில் தெரிந்துவிடும்.