நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நடிகை தமன்னா, ஹிந்தி நடிகர் விஜய் வர்மா இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். ஒன்றாக சில இடங்களுக்கும் சுற்றி வந்தார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கான காரணம் என்னவென்று வெளியாகவில்லை.
இதனிடையே, அவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமன்னா இந்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விஜய் வர்மாவிடம் கேட்டிருந்தாராம். ஆனால், விஜய் வர்மா இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னதாகவும் அதை தமன்னா ஏற்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.
சினிமா உலகில் பல காதல்கள் உருவாகி அவற்றில் சில காதல்கள் பிரிந்துள்ளன, சில காதல்கள் சேர்ந்துள்ளன. சில காதல்கள் திருமணத்திற்குப் பிறகும், சில காதல்கள் குழந்தை பெற்ற பிறகும் கூட பிரிந்துள்ளன. அந்த விதத்தில் இவர்கள் திருணமத்திற்கு முன்பே பிரிந்ததும் நல்லதுதான் என்றும் பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம்.